/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடுகட்டும் திட்டத்தை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

ADDED : ஏப் 12, 2025 07:33 AM

புதுச்சேரி; பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என, அமைச்சர் திருமுருகன் உத்தரவிட்டார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் திருமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வீட்டுவசதி வாரிய செயலாளர் கேசவன், துணை செயலாளர் முருகேசன், பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளர் வீரசெல்வம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் அனில்குமார், நகர அமைப்பு குழுமம் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் தனிச் செயலர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வீடு கட்டும் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் திருமுருகன் பயனாளிகள் பயன்பெறும் வகையில் வீடு கட்டும் திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.