/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் கவிழ்ந்து விபத்து மருத்துவ மாணவி பலி
/
கார் கவிழ்ந்து விபத்து மருத்துவ மாணவி பலி
ADDED : நவ 05, 2025 03:14 AM

புதுச்சேரி: நாமக்கல்லை சேர்ந்தவர் இளங்கோ மகள் ராஜலட்சுமி, 23; ஈரோடு மாவட்டம், பவானியில் இயற்கை மருத்துவ கல்லுாரியில் படித்தார். கல்லுாரி தோழிகள் சுஜிதா, அனுபமா, சுவேதா, தீபிகாஸ்ரீ, காரைக்காலை சேர்ந்த பிபாஷினி ஆகியோருடன் நேற்று முன்தினம் புதுச்சேரி சுற்றுலா வந்தார்.
எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள பிபாஷினி உறவினர் வீட்டிற்கு சென்று, அன்றிரவு 'மஹிந்திரா' காரில் ராஜலட்சுமி உள்ளிட்ட 5 மாணவியர் கடற்கரைக்கு சென்றனர். காரை பிபாஷினி தம்பி நிகிலேஷ்யோகன் ஓட்டினார். பிபாஷினி தன் உறவினர் கவுதமுடன் பைக்கில் கடற்கரைக்கு சென்றார்.
நள்ளிரவு, 1:00 மணிக்கு, பீச்சில் இருந்து அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். புதுச்சேரி பஸ் நிலையம் எதிரே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்ததில், அனைவரும் படுகாயமடைந்தனர்.
இதில், ராஜலட்சுமி இறந்தார். மற்ற 4 மாணவியர், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புதுச்சேரி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

