/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாசி மக விழா: கடற்கரையில் ஏற்பாடுகள் தீவிரம்
/
மாசி மக விழா: கடற்கரையில் ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : பிப் 20, 2024 02:47 AM

புதுச்சேரி, : மாசி மகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி வரும் வரும் 24ம் தேதி நடக்கின்றது.இதற்காக அரசு சார்பில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, கடலோர பகுதியில் பொதுமக்கள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாறைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடந்து வருகின்றது.
தீர்த்த வாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சுவாமிகள் வரும் பாதைகள் அனைத்தும் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன.
ஆயிரக்கண்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா,ஆளில்லா விமானம் ஆகியவை பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது

