ADDED : ஜூலை 23, 2025 05:40 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி, வரும் 27ம் தேதி, அகில இந்திய வானொலி மூலம் உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வானொலியில் வரும் 27ம் தேதி, காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பப்படுகிறது.
அன்று இரவு 8:00 மணிக்கு மீண்டும் தமிழ் மொழியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இத்தகவலை அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி, நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
