ADDED : ஏப் 27, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் பஸ்சிற்காக காத்திருந்த பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மதுகடி காமராஜ் சாலையில் பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் ஆண் நபர் ஒருவர் பஸ்சிற்காக காத்திருந்த இளம்பெண்களை பார்த்து ஆபாசமாக பேசி கிண்டல் செய்தார். துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற நகர போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் திருநள்ளாற்றை சேர்ந்த கோட்டப்பாடி தெற்கு தெருவை சேர்ந்த தினேஷ்குமார், 29; எனத் தெரியவந்தது. நகர போலீசார் தினேஷ் குமார் மீது வழக்குப் பதிந்து செய்து கைது செய்தனர்.
