sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் நெல்லிதோப்பில் ஓட்டு சேகரிப்பு

ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் நெல்லிதோப்பில் ஓட்டு சேகரிப்பு

ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் நெல்லிதோப்பில் ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 26, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 09:03 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் ஜெயக்குமார் நேற்று காலை வேல்முருகன் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

மதியம் அண்ணா நகரில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நெல்லித்தோப்பு தொகுதி மகளிர் குழுவினர் மற்றும் தொகுதி முக்கியஸ்தர்களை சந்தித்து ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது மகளிர் குழு பெண்கள், தங்களது குடும்பத்தை சேர்ந்த மொத்த ஓட்டுகளையும் செலுத்தி புதுச்சேரியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெறுமைமை சேர்ப்பதாக உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாலையில் வெண்ணிலா நகர், சத்யா நகர், கிழக்கு பகுதி, சக்தி நகர் உள்ளிட்ட பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வேட்பாளர் ஜெயக்குமார், வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் துாவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us