/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உருளையன்பேட்டை தொகுதியில் எல்.ஜே.கே., அலுவலகம் திறப்பு
/
உருளையன்பேட்டை தொகுதியில் எல்.ஜே.கே., அலுவலகம் திறப்பு
உருளையன்பேட்டை தொகுதியில் எல்.ஜே.கே., அலுவலகம் திறப்பு
உருளையன்பேட்டை தொகுதியில் எல்.ஜே.கே., அலுவலகம் திறப்பு
ADDED : ஜன 22, 2026 05:40 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி அலுவலகத்தை நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் திறந்து வைத்தார்.
உருளையன்பேட்டை தொகுதி, எல்.ஜே.கே., கட்சி நிர்வாகி கவுதம் குமார் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், ஜே.சி.எம்.,மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், பொதுச்செயலாளர்கள் துரைசாமி, பிரபாகரன், மண்டல பொது செயலாளர்கள் சுரேஷ், பொருளாளர் அயூப் கான், அரியாங்குப்பம் தொகுதி நிர்வாகி வாழுமுனி, நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்துமளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை எல்.ஜே.கே., தலைவர்ஜோஸ் சார்லஸ் மார்டின் பொதுமக்களுக்கு வழங்கி பேசுகையில், 'அரசியலுக்கு ஏன் வந்துள்ளோம் என்றால் இங்கு நிறைய மக்கள் பின்தங்கி உள்ளனர். கழிவுநீர் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட பகுதியும் இந்த உருளையன்பேட்டை தான். ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. அனைவருக்கும் நல்ல கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்காக தான் நாங்கள் வந்துள்ளோம்' என்றார்.

