/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி லெனின் சிலை; பா.ஜ., - கம்யூ.,வினர் மோதல்
/
அனுமதியின்றி லெனின் சிலை; பா.ஜ., - கம்யூ.,வினர் மோதல்
அனுமதியின்றி லெனின் சிலை; பா.ஜ., - கம்யூ.,வினர் மோதல்
அனுமதியின்றி லெனின் சிலை; பா.ஜ., - கம்யூ.,வினர் மோதல்
ADDED : டிச 24, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, நெல்லித்தோப்பு, லெனின் வீதி சந்திப்பு, மணிமேகலை பள்ளி அருகில் அனுமதியின்றி இ.கம்யூ.,வினர் 6 அடி உயர லெனின் சிலை நிறுவி, நேற்று காலை திறந்தனர்.
அந்த சிலையை அகற்றக்கோரி, பா.ஜ., மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், 3 அடி உயர விநாயகர் சிலையுடன் அமர்ந்து பஜனை பாடினர். விநாயகர் சிலையை இ.கம்யூ.,வினர் அகற்ற முயன்றனர். இதில், இரு தரப்புக்கும் மோதல் உருவானதால், போலீசார் தடியடி நடத்தினர். வருவாய் துறையினர், லெனின் சிலையை பேனர் சுற்றி மறைத்தனர். பா.ஜ.,வினர் விநாயகர் சிலையுடன் அங்கிருந்து சென்றனர்.