/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
/
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 19, 2024 06:24 AM

புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
புதுச்சேரி அரசில் கடந்த 2015, 2016ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 1,500க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்கள், கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேர்தல் துறை உத்தரவினால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள், மீண்டும் வேலை வழங்க கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி,பொதுப்பணி துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கி மாதச் சம்பளம் 10,500 வழங்கப்படும் என, அறிவித்தார்.
அறிவித்து 20 மாதங்கள் ஆனநிலையில் இதுவரை வேலை வழங்கவில்லை.இதனை கண்டித்தும், விரைவில் மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.தலைமைஒருங்கிணைப்பாளர்தெய்வீகன், காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்வினோத், மணிவண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். வரும் 20ம் தேதி வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.தினமும் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை இப்போராட்டம் நடக்கிறது.
தலைமைஒருங்கிணைப்பாளர்தெய்வீகன் கூறுகையில், 'அரசாணை வெளியிட அரசின் முடிவிற்காக காத்திருக்கிறோம். அடுத்த கட்டமாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.

