நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மக்கள் நல பணியாளரை கலெக்டர் பாராட்டினார்.
காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக தேசிய அளவிலான கண்காணிப்பு குழு காரைக்காலில் உள்ள 10 கிராம பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து கடந்த 16ம் முதல் 24ம் தேதி வரை ஆய்வு செய்தனர்.
இதில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்கள் நல பணியாளர் பழனிவேல் என்பவர் திட்டத்தின் பதிவேடுகளை முறையாக மற்றும் தெளிவாக பராமரித்தலுக்காக கலெக்டர் மணிகண்டன் அவரை அழைந்து சால்வை அணிவித்து பாராட்டினார்

