/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூடப்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
கூடப்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 07, 2025 05:59 AM

வில்லியனுார் : நீட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ள கூடப்பாக்கம் அரசு பள்ளிமாணவி மற்றும் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் பாக்யலட்சுமி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் செல்வம் வரவேற்றார். விழாவில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., மற்றும் பா.ஜ., மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர், இப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த மாணவி சுவாதியை பாராட்டினர்.
மேலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 28 மாணவர்களை பாராட்டி, கைக் கடிகாரம் பரிசாக வழங்கினர். மாணவி சுவாதிக்கு பள்ளி சார்பில் துணை முதல்வர் ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியை அறிவியல் ஆசிரியை மரகதம் தொகுத்து வழங்கினார். பொறுப்பாசிரியர் திலகவதி நன்றி கூறினார்.