sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிருஷ்ண லீலா நுால் வெளியீடு

கிருஷ்ண லீலா நுால் வெளியீடு

கிருஷ்ண லீலா நுால் வெளியீடு


ADDED : ஏப் 25, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 09:12 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு எழுதிய, கிருஷ்ணரின் பல்வேறு பரிணாமங்கள் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்பான 'கிருஷ்ண லீலா' நுால் வெளியீட்டு விழா, புதுச்சேரி எஸ்.வி., படேல் சாலையில் உள்ள ஓட்டல் சற்குருவில் நடந்தது.

புதுச்சேரி ஈஷா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பிரசாத் வரவேற்றார். புதுச்சேரி, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நடராஜன் நுாலை வெளிட்டார். சற்குரு ஓட்டல் நிர்வாக இயக்குனர் அமர்நாத் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு விருந்தினராக கவிஞர் ரமணன் கூறுகையில், 'சற்குரு என்பவர் நாம் வாழ்கின்ற காலத்திற்கு மிகவும் அவசியமானவர். தற்போது சூழ்நிலையில், சமுதாயத்தில் உணர்ச்சிகள் நொறுங்கி போகும் நிலையில் உள்ளது. அதை கட்டி காக்க சாதி, மதம், இனம், மொழி என, இயக்கம் தேவைப்படுகிறது. அதை யோகத்தின் மூலமாக, கற்பிக்க காலம் ஏற்படுத்தி கொடுத்த வரம், கொடை என, நாம் சற்குருவை சொல்லலாம். வரும் காலத்தில் தான் சற்குருவின் சேவைகள் புரியும்.

தற்போது உள்ள சூழ்நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் திறன் குறைந்துள்ளது. அதற்கு பெற்றோர் தான் காரணம். சிந்தனை வளர வேண்டும் எனில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.

விழாவில், பேச்சாளர் இந்திரா விஜயலட்சுமி, பிரபாகரன் மற்றும் தொழிலதிபர்கள், ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us