/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ரோபோடிக் முறைமை திறப்பு ஏ.ஜி.பத்மாவதி'ஸ் மருத்துவமனையில் அறிமுகம்

ADDED : நவ 10, 2025 03:29 AM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம், ஏ.ஜி.பத்மாவதி'ஸ் மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ரோபோடிக் முறைமை திறப்பு விழாநடந்தது.
முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். அரசுகொறடா ஆறுமுகம், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை செயலாளர் நாராயணசாமி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் இளங்கோவன் வாழ்த்தி பேசினர்.
துணை இயக்குனர் சுமதி இளங்கோவன் வரவேற்றார்.
இயக்குனர் சிந்து இளங்கோவன், மருத்துவ கண்காணிப்பாளர் ஆதிகணேஷ், குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவு நிபுணர் திருமுருகன் சேரன், மகப்பேறு இந்திரா ஸ்ரீனிவாசன், ரத்த பரிசோதனை நிபுணர் லாவண்யா, சர்க்கரை மற்றும் பொதுநலம்அருள்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
டாக்டர்கள் அரவிந்தன் காளமேகம், விஜயராகவன் ஆகியோர் கூறுகையில், 'புதுச்சேரியில் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரோபோடிக் முறைமையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் முழங்கால் ஸ்கேன் செய்யப்பட்டு, ரோபோடிக் கணினியில் பதிவேற்றப்படுகிறது.
அறுவை சிகிச்சையின்போது, கணினி வழிசெலுத்தலின் நேரடி வழிகாட்டுதலுடன் இயங்கும் போரோடிக் கை, முன் திட்டமிட்டப்படி எலும்பு மற்றும் கார்டிலேஜ் வெட்டுகளை மிக துல்லியமாக செய்கிறது.
ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையினால் தசை மற்றும் மென்மையான திசுக்களுக்கு குறைந்த சேதம்,அறுவை சிகிச்சைக்கு பின் விரைவான குணமடைதல், குறைந்த வலி மற்றும் ரத்த இழப்பு ஏற்படுகிறது.
புதிய தொழில்நுட்பம் எலும்பியல் அறுவை சிகிச்சை துறையில் நிபுணரின் திறமை மற்றும்அனுபவத்துடன், ரோபோடிக் துல்லியத்தையும் இணைத்து அதிக பாதுகாப்பும், நோயாளி திருப்தியையும் வழங்குகிறது' என்றனர்.