/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கிச்சன் கேபினட்' : அலறும் அரசு அதிகாரிகள்; கீழ்நிலை முதல் உச்சம் வரை ஒரே புலம்பல்
/
'கிச்சன் கேபினட்' : அலறும் அரசு அதிகாரிகள்; கீழ்நிலை முதல் உச்சம் வரை ஒரே புலம்பல்
'கிச்சன் கேபினட்' : அலறும் அரசு அதிகாரிகள்; கீழ்நிலை முதல் உச்சம் வரை ஒரே புலம்பல்
'கிச்சன் கேபினட்' : அலறும் அரசு அதிகாரிகள்; கீழ்நிலை முதல் உச்சம் வரை ஒரே புலம்பல்
ADDED : ஆக 24, 2025 06:24 AM

தொ குதி பிரச்னை தீர்க்கப்படாமல் ஜவ்வாக இழுக்கும்போது மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மக்கள் பிரதிநிதிகள் திண்டாடுகின்றனர். எதிர்ப்புகளையும் சம்பாதிக்கின்றனர்.
அதுபோன்ற நேரங்களில், என்னுடைய கடமை முடித்துவிட்டேன். அந்த அதிகாரி தான் அனுமதி தர மறுக்கிறார். கும்பலாக வாங்க... அவரிடம் நேரடியாகவே கேட்டு விடுவோம் என்றுதொகுதி மக்களுடன் அரசு துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். அப்படி கொந்தளிக்கும் எம்.எல்.ஏ.,க்களை அரசு அதிகாரிகள் எப்படியேனும் சமாளித்து 'கூல்' செய்து அனுப்பி வைப்பது வழக்கம்.
ஆனால், சமீபகாலமாக இப்படியெல்லாம் 'கூல்' செய்து, எம்.எல்.ஏ.,க்களை அதிகாரிகளால் அனுப்ப முடியவில்லை. மக்கள் பிரதிநிதிகளுடன் அவர்களுடைய மனைவிகளும் கூடவே வருவதே இதற்கு காரணம்.ஆரம்பத்தில் தொகுதி பிரச்னை குறித்து மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் அனல் பறக்க வாக்குவாதம் ஏற்பட்டாலும், ஒரு கட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் அமைதியாகி விட, அவர்களுடைய மனைவிகளின் குரலே ஓங்குகின்றது. அதிகாரிகளை பார்த்து சராமரியாக கேள்வி எழுப்புகின்றனர்.
அப்படி கேளுங்க... இப்படி கேளுங்க.. என எல்லா பாயிண்ட்டுகளையும் வரிசையாக எடுத்து கொடுக்கின்றனர். அப்படியே வீடியோவும் எடுக்க சொல்லி சமூக வலைதளங்களிலும் பரவவிடுகின்றனர்.
வழக்கம்போல் பிரச்னை எப்படியாவது சமாளித்து எம்.எல்.ஏ.,க்களை திருப்பி அனுப்பிவிடலாம் என, நினைக்கும் அதிகாரிகள், கிச்சன் கேபினட்டிகளின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.
ஒரு கட்டத்தில் டென்ஷன் எல்லைக்கே போகும் அதிகாரிகள், நீங்க அமைதியாக இருங்க மேடம். சாருக்கு எல்லாமே தெரியும். சார் சொல்லிட்டார். நாங்க கண்டிப்பாக செய்து கொடுத்துவிடுவோம் என்று சொன்னாலும் கூட அவர்கள், அமைதியாவது இல்லை. சகட்டுமேனிக்கு பேசுகின்றனர். இதனால் என்ன சொல்வதென்றே தெரியாமல் அதிகாரிகளும் திருதிருவென விழிபிதுங்கி வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எங்களுடைய கடமை. அவரின் கிச்சன் கேபினட்டிற்கு நாங்கள் பதில் சொல்லவேண்டுமா. அவுங்க அலப்பறை தாங்கல முடியல என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
இந்த கிச்சன் கேபினட் கலாசாரத்திற்கு முதல்வர், மணி கட்ட வேண்டும் என்பதே அரசு அதிகாரிகள் கருத்தாக உள்ளது.