ADDED : செப் 25, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : வட்டம் 3 சார்பில், பள்ளிகளுக்கு இடையே, கபடி போட்டி அபிஷே கப்பாக்கம் அரசு பள்ளியில் நடந்தது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், 3ம் வட்டத்திற்கான இரண்டு நாட்கள் நடக்கும் கபடி போட்டி, தவளக்குப்பம் அருகே உள்ள அபிேஷகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று துவங்கியது. தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா போட்டியை,துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் வரவேற்றார். இந்த போட்டியில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து, 48 அணிகள், கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இரண்டாம் நாள் போட்டி இன்று நடக்கிறது. அதனை தொடர்ந்து வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வட்டத்தின் அமைப்பு செயலாளர் தணிகைகுமரன் செய்து வருகிறார்.