ஜோஸ் சார்லஸ் மார்டினின் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு
ஜோஸ் சார்லஸ் மார்டினின் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு
ADDED : மார் 24, 2026 10:49 PM
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரூ.597 கோடிக்கு சொத்து உள்ளதாக தேர்தல் பிரமான பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
அசையும் சொத்துக்கள்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி பெயரில் மெர்சிடஸ் பென்ஸ், டொயோட்டா வெல்பைர் இரு கார்கள் உள்ளிட்ட ரூ.339 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவித்து மலைக்க வைத்துள்ளார்.
கையிருப்பு ரொக்கம்; அவரிடம் ரூ.20.59 லட்சமும், அவரது மனைவியிடம் ரூ.1.82 லட்சம் உள்ளத. மேலும், பல்வேறு வங்கிகளில் ரூ.2 .03 கோடி உள்ளது.
முதலீடுகள்:
சுமார் 64-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் ரூ.74.28 கோடி முதலீடு செய்துள்ளார்.
விலைமதிப்பற்ற பொருட்கள்: வேட்பாளரிடம் 25.67 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது; அவரது மனைவியிடம் ரூ.5.35 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. மேலும் வேட்பாளரிடம் ரூ.44.87 கோடி மதிப்பிலான வைரங்களும், அவரது மனைவியிடம் ரூ.2.10 கோடி மதிப்பிலான வைரங்களும் உள்ளன.
வெள்ளி: வேட்பாளரிடம் ரூ.3.77 கோடி மதிப்பிலான வெள்ளியும், மனைவியிடம் ரூ.1.68 கோடி மதிப்பிலான வெள்ளியும் உள்ளது.
கைக்கடிகாரங்கள்: வேட்பாளருக்கு 38 கோடிக்கு கைகடிகாரம் உள்ளது. அவரது மனைவிக்கு 1.14 கோடிக்கு மதிப்பிலான கைகடிகாரம் உள்ளது.
அசையா சொத்துக்கள் வேட்பாளருக்கு சென்னை பொன்னேரி மற்றும் இதர இடங்களில் உள்ள விவசாயம் அல்லாத நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.192.50 கோடி ஆகும். குடியிருப்பு கட்டடங்களின் மொத்த மதிப்பு ரூ.76.64 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.269 கோடி.
கடன்கள் மற்றும் பொறுப்புகள்: வேட்பாளருக்கு வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் கடன் பொறுப்புகள் உள்ளன.மொத்த கடன்: 2,10,79,35,102.26. அதாவது 210.79 கோடி கடன். இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கியில் பெறப்பட்ட கடன்களும் அடங்கும்.
வழக்கு விவரங்கள்: வேட்பாளர் மீது அமலாக்கத் துறை தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின கீழான புகார்களும் அடங்கும்.
கல்வித் தகுதி: இவர் 2006-ம் ஆண்டு சென்னையில் உள்ள புனித ஜான்ஸ் ஆங்கிலப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துள்ளார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மொத்த சொத்து மதிப்பு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் சேர்த்து 597 கோடி ரூபாய் ஆகும். அதே சமயம், அவருக்கு 210 கோடி ரூபாய் கடன் இருப்பதும் பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
