/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெட்லைட் விஷயத்தில் விழித்து கொள்ளுவது நல்லது: அபராதம் போட தயாராகும் போக்குவரத்து துறை
/
ஹெட்லைட் விஷயத்தில் விழித்து கொள்ளுவது நல்லது: அபராதம் போட தயாராகும் போக்குவரத்து துறை
ஹெட்லைட் விஷயத்தில் விழித்து கொள்ளுவது நல்லது: அபராதம் போட தயாராகும் போக்குவரத்து துறை
ஹெட்லைட் விஷயத்தில் விழித்து கொள்ளுவது நல்லது: அபராதம் போட தயாராகும் போக்குவரத்து துறை
UPDATED : ஆக 03, 2025 03:48 AM
ADDED : ஆக 02, 2025 11:14 PM

ெஹட் லைட் விஷயத்தில் அலட்சியம் காட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து துறை தயாராகி வருகிறது.
இரவில் மட்டுமல்ல, பகலிலும்கூட இப்போதெல்லாம் முகப்பு விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு பறக்கின்றன வாகனங்கள். பளிச்சென எரிந்து கண்ணைக் கூச வைக்கும் ஹெட்லைட்களால் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன.
வாகனங்களில் முகப்பு விளக்கான ஹெட் லைட் ஒழுங்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே தற்போது ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் நகர சாலைகளில் ைஹ பீம்களை பயன்படுத்துகிறார்கள். இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு கண்களில் நேரடியாக ஒளி விழுந்து விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
நகரத்தில் இரவு நேரம் வாகனங்களில் பயணிக்கும்போது லோ பீம் எனும் சாதாரண ஒளி போதும். ைஹ பீம் பயன்படுத்தும் போது எதிர் வருபவர்களுக்கு மிகுந்த கண் கூச்சத்தை ஏற்படுத்தி பய உணர்வை உண்டாக்கி விபத்திற்கு வழி வகுக்கும்.இது மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து விதி மீறலும் கூட. இது ஒரு பக்கம் இருக்க பலர் வாகனத்தில் உள்ள ஹெட் லைட்சரிசெய்யும் வசதி இருப்பதை தெரியவில்லை. இந்த அறியாமை கூட ஹெட் லைட் ரூபத்தில் பெரிய விபத்தினை ஏற்படுத்தி விடும்.
தடுக்க முடியாதா.... வாகனங்களின் முகப்பு விளக்குகளில் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த என்ன வழி என, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் கூறியதாவது;
வாகன ஓட்டிகள் ெஹட் லைட் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். இது தவறு. இது பெரிய விபத்திற்கும் காரணமாக அமைந்து விடும். பயணிகள் அதிகமாக இருந்தால் அல்லது பொருட்கள் ஏற்றப்பட்டால், வாகனத்தின் முன் பகுதியின் ஹெட் லைட் நேராக எதிரே வரும் வாகனத்தின் கண்களில் விழுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
பலரும் வாகனத்தில் பளீச்சென லைட்டுகளை ஒளிரவிட்டு செல்ல வேண்டும் என, நினைக்கின்றனர். அதன் பின்னணியில் உள்ள ஆபத்தையும் உணருவதில்லை. வாகனத்தின் ெஹட் லைட் ஒளியின் பிரகாசம் முக்கியமல்ல. அந்த ஒளி எங்கு விழுகிறது என்பது தான் ரொம்ப முக்கியம். வாகனத்தில் அதிக எடை இருந்தால், ஹெட்லைட் உயரத்தை நீங்களே சரிசெய்ய வேண்டும். இதற்கென ெஹட் லேம்ப் அலைனர் எனும் ஒரு முகப்பு விளக்கு சீரமைப்பான் வசதி உள்ளது.
இதை முறையாக உபயோகப்படுத்தி ஒளி விழும் கோணத்தை வாகனத்தை செலுத்தும் முன்பே சரி செய்து கொண்டு விபத்தினை தடுக்க முடியும்.
ெஹட் லைட் வெளிச்சத்தினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் தீவிர வாக சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலையில் வாகனங்களை தற்காலிகமாக நிறுத்தி ஹெட்லைட் சரியாக பயன்படுத்தப்படுகிறதா என சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம்.இது தவிர ஆர்.டி.ஓ., வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஓட்டுநர் உரிமம் பரீட்சையில் ஹெட்லைட் பயன்படுத்தும் முறைகள் சேர்க்கப்பட உள்ளது.
முகப்பு விளக்கை சரியாக பயன்படுத்தாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க உள்ளோம். முதல் முறை சிக்கினால் ரூ.500 அபராதம். மறுமுறை சிக்கினால் ரூ1,000 அபராதம் விதிக்க மோட்டார் வாகன சட்டம் பிரிவு 177A கீழ் விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த விதிமுறைகளை கையாண்டு விபத்தில்லா இரவு நேர பயணத்தை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.
என்ன வாகன ஓட்டிகளே... போக்குவரத்து துறை சொல்வது புரிகிறதா... ெஹட் லைட் விஷயத்தில் ரொம்ப கவனம் தேவை. பல சாலை பெரிய விபத்துகளுக்குசிறிய தவறுகள் தான் காரணமாக அமைகின்றன. எனவே, போக்குவரத்து துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல், கட்டாயம் கடை பிடிப்போம். ஒரு சிறிய ஒளிக் கற்றை மாற்றம்; ஒரு பெரிய விபத்தினை தவிர்க்க உதவும். உயிர்களையும் காப்பாற்றும்.