/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரம் புலனாய்வு குழு விசாரணை
/
போலி மருந்து விவகாரம் புலனாய்வு குழு விசாரணை
ADDED : டிச 20, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் மதுரையை சேர்ந்த ராஜா, 42, விவேக் உள்பட 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ராஜாவை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முடிவு செய்து, புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ராஜாவுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் ராஜாவை காவலில் எடுத்து, முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

