sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மை அறிமுகம்

பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மை அறிமுகம்

பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மை அறிமுகம்


ADDED : ஜூலை 08, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 05:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி :புதுச்சேரி, முத்திரையார்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்தும் நோக்கில், 'இனியா ஸ்ரீ ' என்ற பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மையை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த பேசும் பொம்மையில் ராஸ்பெர்ரி பை 3 போன்ற சிறிய கணினி அமைப்புகள், ஸ்பீக்கர், மைக்ரோ போன் மற்றும் இணைய வசதி பயன்படுத்தப்பட்டு, 5000 ஆங்கில சொற்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் கடினமான ஆங்கில சொற்களின் அர்த்தங்களை, 'இனியா ஸ்ரீ ' யிடம் கேட்டவுடன், பொம்மை அழகான ஆங்கில உச்சரிப்பில் மாணவர்கள் கேட்ட வார்த்தைக்கு அதன் அர்த்தத்தை ஆங்கிலத்தில் தெளிவாக கூறுகிறது.

ஆங்கில ஆசிரியை பொம்மை 'இனியா ஸ்ரீ'யை பள்ளியின் அட்டல் டிங்கரிங் ஆய்வகத்தில் இருந்த கருவிகளை கொண்டு, இயற்பியல் ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள், 'இனியா ஸ்ரீ ' பேசும் ஆங்கில ஆசிரியை பொம்மையை எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தி, ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் பொருள் மற்றும் விளக்கங்களை கூறுதல், எதிர்சொற்கள், ஜோடிகள், இலக்கணக் கருத்துகள், வாக்கியங்களை அமைத்தல் போன்ற பல ஆங்கிலத் திறன்களை மகிழ்ச்சியான கற்றல் முறையில் வளர்க்கும் வகையில் உருவாக்குவோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us