ரூ4,750 கோடியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்: முதல்வர் ரங்கசாமி தகவல்
ரூ4,750 கோடியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்: முதல்வர் ரங்கசாமி தகவல்
UPDATED : நவ 01, 2026 06:08 PM
ADDED : நவ 01, 2026 06:06 PM

புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.4,750 கோடியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
விடுதலை நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திய வளர்ச்சி விகிதத்தை 8.12 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். தனி நபர் வருமானத்தை 6.5 விழுக்காடு வளர்ச்சி பெறச் செய்து, ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 926 ஆக உயர்த்தியிருக்கிறோம்.
மாநில மொத்த வருவாயை ரூ.13 ஆயிரத்து 398 கோடியாக உயர்த்தி, 8.51 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறோம். மாநில சொந்த வருவாயை ரூ.6,848 கோடியில் இருந்து ரூ.7,632 கோடியாக உயர்த்தி, 11.44 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறாம்.
மூலதன செலவினைத்தை ரூ.447.48 கோடியிலிருந்து ரூ.765.59 கோடியாக உயர்த்தி 71.09 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளோம். நகர்ப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், ரூ.4,750 கோடி மதிப்பில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், ரூ.150 கோடியில் புதிய குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டப்படுபட்டுள்ளது.
காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் 24 மணி நேரமும் குடி நீர் வினியோகம் ஏற்படுத்துதல், புதுச்சேரி ரூ.550 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
உலக வங்கி நிதியுதவிடன், ரூ.1,433 கோடியில் கடலோர பாதுகாப்பு திட்டத்தின் மூலம், நான்கு பிராந்தியங்களிலும் கடலரிப்பை தடுத்தல், கடலோர பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், சதுப்புநில காடுகளை மீட்டெத்தல் உள்ளிடட பணிகள் மேற்கொள்ளபட உள்ளன.
இதற்காக ரூ.875 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர்கரை நகராட்சி, தட்டாஞ்சாவடியில் மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.725 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சியால் இந்தியாவிலேயே இந்த மண்டலம் முதல் முறையாக உருவாக்கப்படுகிறது.
இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில், 10 ஆயிரம் பேர் நேரடி மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்பை பெறுவர். கரசூரில் பிப்டிக் நிறுவனம் மூலம் 213.12 ஏக்கர் பரப்பளவில், தனியார் பங்களிப்புடன் ரூ.2,500 கோடி மூதலீட்டில் பன்முக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுலா அமைச்சகம் தேர்தெடுக்கப்பட்ட 50 சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில்,‘ஒரு மாநிலம்–ஒரு உலகளாவிய சுற்றுலா தளம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் சேர திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. காவல் துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பேரிடர் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிய வேலுார் தொழில்நுட்ப பல்கலைகழத்தின் உதவியுடன் பாதிப்பு வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அட்டவணை, பழங்குடியின மற்றும் இதர பொருளாதார பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இருந்து ராஜமுந்திரி, திருப்பதி, கொச்சி மற்றும் கண்ணுார் ஆகிய இடங்களுக்கு விமான போக்குவரத்து வசதி ஏற்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.
