sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறுதி தேதிக்குள் மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தல்

 இறுதி தேதிக்குள் மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தல்

 இறுதி தேதிக்குள் மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தல்


ADDED : ஏப் 17, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:03 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மின் நுகர்வோர்கள், தங்களது கட்டண பாக்கியை, இறுதி தேதிக்குள் செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தவிர்க்குமாறு மின் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மின்துறை கிராமம் (வடக்கு) செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

மின்துறை கிராமம் வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனுார், பூமியான்பேட், லாஸ்பேட், கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் ஆகிய இயக்குதல் மற்றும் பராமரித்தலும் பிரிவு அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை, பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தி, மின் துண்டிப்பை தவிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் இணைப்பு துண்டித்த பிறகு, நிலுவை தொகை முழுவதையும் செலுத்திய பிறகே மறுமின் இணைப்பு வழங்கப்படும். துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்கு அருகில் அல்லது அந்த இடத்தில் இருக்கும் வேறு ஏதேனும் மின் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுத்தால், அந்த இணைப்பையும் எந்த வித முன் அறிவிப்பின்றி துண்டிக்கப்படும்.

எனவே, மின் நுகர்வோர் அனைவரும் மின் துறையுடன் ஓத்துழைத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us