/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற அறிவுறுத்தல்
/
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற அறிவுறுத்தல்
ADDED : ஆக 25, 2025 02:41 AM
புதுச்சேரி : பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்துவதற்கு, நகராட்சி மற்றும் காவல் துறையிடம் முன் அனுமதி பெற்றிட வேண்டும் என, உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு;
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் பொருட்டு, உழவர்கரை நகராட்சி பகுதியில் வரும் 27ம் தேதி பொது மக்கள் கீழ் கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றிட வேண்டும். அதன்படி, விநாயகர் சிலைகள் செய்பவர்கள், நகராட்சியிடம் அனுமதி பெற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் படி, சுற்று சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்துவதற்கு நகராட்சி மற்றும் காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் சிலையினை அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும்.
விழா நடத்தும் இடங்களில் ஒலி பெருக்கிகள் அமைப்பதற்கு காவல் துறையிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும்.
ரசாயனம் பூசிய விநாயகர் சிலைகளை தவிர்த்திட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொருட்களால் ஆன அலங்கார பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.