sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வலியுறுத்தல்

காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வலியுறுத்தல்

காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 06, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 06:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க செயலாளர் ஜெகநாதன்அறிக்கை:

சுகாதார உதவியாளர்களுக்கு, நியமன விதிப்படி5 ஆண்டுகள் பணி முடித்து இருந்தால், சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படும். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பதவிகளை, நியமன விதிப்படி தகுதி வாய்ந்த சுகாதார உதவியாளர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர்.

உதவி செவிலிய கண்காணிப்பாளர், முதுநிலை செவிலிய அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

நோய் வருமுன் காக்கும் திட்டத்தின் கீழ் களப்பணியாற்றி வரும் சுகாதார உதவியாளர்களின் பதவி உயர்வு சுகாதாரதுறையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. காலியாக உள்ள 14 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப கோப்புகள் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

இம்மாதம் ஒரு சுகாதார ஆய்வாளர் பணி ஓய்வு பெற உள்ளார். இதனால், மொத்தமுள்ள 35 பணியிடங்களில், 15 இடங்கள் காலியாகிவிடும். எனவே காலம் கடத்தாமல் தகுதியான சுகாதார உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us