ADDED : செப் 26, 2024 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் ஐந்து நாட்கள் உபன்யாசம் நிகழ்ச்சி துவங்கியது.
புதுச்சேரி விட்டல் சேவா டிரஸ்ட் சார்பில், நாம சாகர் நிகழ்ச்சி இ.சி.ஆர்., கே.பி.எஸ்., கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.இரவு 7 மணிக்கு பஜனை , அதனை தொடர்ந்து உபன்யாசம் நடந்தது.
விட்டல் தாஸ் மகராஜ் உயன்யாசம் செய்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 29ம் தேதி வரை தொடர்ந்து பஜனையும், உபன்யாசமும் நடக்கின்றது. மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை, உபன்யாசத்தில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

