/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா
ADDED : டிச 22, 2025 05:38 AM

பாகூர்: இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா பாகூரில் நடந்தது.
மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், பெருமாள் முன்னிலை வகித்தனர்.
தேசிய செயலாளர் ஆனி ராஜா, தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநிலக் குழு உறுப்பினர் சிவா, மாநில பொருளாளர் சுப்பையா, வழக்கறிஞர் ஜீவானந்தம், மாநில நிர்வாகக்குழு அந்தோணி, ரவி, எழிலன், காரைக்கால் செயலாளர் பக்ரிசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.ஆர்.எம்.,தேசிய தலைவர் ராமமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி., மாநில கவுரவத் தலைவர் அபிஷேகம், கீதநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பாகூர் துாக்கு பாலம் சந்திப்பில் துவங்கிய செம்படை ஊர்வலம், பாகூர் மாட வீதிகள் வழியாக வலம் வந்து, விழா மேடைக்கு வந்தனர்.

