ADDED : அக் 07, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் திறப்பு விழா நடந்தது.
விரிவுரையாளர் வேல்முருகன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ரவி சமூக அறிவியல் மன்றத்தை திறந்து வைத்தார். அலுவலக கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் ரமேஷ், மோகன்ராஜ், ஜெயப்பிரகாஷ், பெருமாள் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி பொறுப்பாசிரியர் முரளி, புவியியல் விரிவுரையாளர் குமரன், தலைமை ஆசிரியர் அப்துல் மாலிக் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அறிவியல் ஆசிரியர் ரவிசங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் விநாயகம் வெங்கடாஜலபதி, செல்வன், ராஜேஷ், இறைவாசன், வீரபத்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
சமூக அறிவியல் ஆசிரியர் நாகப்பன் நன்றி கூறினார்.

