sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி கொலை: கணவர் வெறிச்செயல்

தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி கொலை: கணவர் வெறிச்செயல்

தலையில் அம்மி கல்லை போட்டு மனைவி கொலை: கணவர் வெறிச்செயல்


ADDED : பிப் 16, 2025 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்டமங்கலம்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 45; இவரது மனைவி உமா, 42; இவர்களுக்கு மனோ 23; என்ற மகனும், வினோதினி 21; என்ற மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவரும் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். வேலை செய்யும் இடத்தில் உமா, சக தொழிலாளர்களிடம் சகஜமாக நெருங்கி பழகுவதை மணிகண்டன் கண்டித்து வந்ததால், தம்பதிக்குள் அடிக்கடி தகரறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் உள்ள சூளைக்கு வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பினர். இரவு 8:30 மணிக்கு தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது மணிகண்டன், உமா பிற ஆண்களிடம் பழகுவதை கண்டித்து, ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அக்கம் பக்கத்தினர், தம்பதியை சமாதானம் செய்து வைத்தனர்.

இரவு 10:00 மணிக்கு உமா மற்றும் மகன், மகள் ஆகிய மூவரும் சாப்பிட்டு விட்டு படுத்து துாங்கினர். மனைவி நடத்தையில் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த மணிகண்டன், இரவு 11:00 மணிக்கு, துாங்கிக் கொண்டிருந்த உமா தலையில் அம்மிக் கல்லை துாக்கி போட்டார். அதில், அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார்.

உடன் மணிகண்டன், இரவு 11:30 மணிக்கு மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

உடன் டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us