ADDED : மார் 31, 2026 07:21 PM

புதுச்சேரி: புதுச்சேரி மனித வளம் வட்டாரம் சார்பில் 106 வது மாதாந்திர கூட்டம் மற்றும் மகளிர் தின விழா, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
புதுச்சேரி மனிதவள வட்டாரம் முன்னாள் தலைவர் டட்லி டக்லஸ் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக காவேரி சில்க்ஸ் நிறுவனர் நெடுமாறன், இ.எஸ்.ஐ.சி., முன்னாள் இயக்குனர் சங்கரலிங்கம், முன்னாள் காவல் துறை எஸ்.பி., பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
புதுச்சேரியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து மனிதவள மேலாளர்கள் மற்றும் வல்லுனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதுச்சேரி மனிதவளத்துறையில் சாதித்த பெண் மனிதவள வல்லுனர்களை கவுரவித்து கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை புதுச்சேரி மனிதவள தலைவர் நிஷா பேகம், துணை தலைவர் - கிருஷ்ணராஜ், செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ரோஜீ , துணை பொருளாளர் அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
