ADDED : ஜன 27, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
அதில், மலையேற்றத்தில் சிறந்து விளங்கியதற்காக மலையேற்ற வீராங்கனை திவ்யா, வாலிபால் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்ற மாணவர் தரன் ஆகியோருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கலைக்கு விருது பரத நாட்டிய நடன கலைஞர்கள் ரித்திகா பாரதிதாசன், கோபிகா கணேசன் ஆகியோருக்கு கலை, பண்பாட்டுத்துறை விருது வழங்கி, அவர்களுடைய கலை சேவை பாராட்டப்பட்டது.
விண்வெளி ஆராய்ச்சி துறை புதுச்சேரியை சேர்ந்த இஸ்ரோ விண்வெளி ஆய்வாளர் புருஷோத்தமனின், விண்வெளி சேவையை பாராட்டி, புதுச்சேரி அரசின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

