/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் மரபு விதை நெல் கண்காட்சி
/
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் மரபு விதை நெல் கண்காட்சி
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் மரபு விதை நெல் கண்காட்சி
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் மரபு விதை நெல் கண்காட்சி
ADDED : ஆக 04, 2025 01:16 AM

புதுச்சேரி : புதுச்சேரி அருங்காட்சியகத்தில் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், மரபு விதை நெல் கண்காட்சி புதுச்சேரி அருங் காட்சியகத்தில் நடந்தது.
கண்காட்சியினை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு திறந்து வைத்து, பார்வையிட்டார். முன்னாள் எஸ்.பி., சண்முகசுந்தரம், தலைமை செயலக சட்ட மொழிபெயர்ப்பாளர் சுந்தர முருகன், கலாம் சமூக இலக்கியம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் இளங்கோவன், புதுச்சேரி முப ்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச்சங்கத்தின் நிறுவனர் மோகன், கலை முதியோர் இல்லத்தின் நிறுவனர் கலைவாணி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில், ஆத்துார் கிச்சலி சம்பா, இந்திரயாணி, இரத் தசாலி , இலுப்பைப்பூ சம்பா, ஒட்டடையான், கட்டிச் சம்பா, கருங்குறுவை ,கருத்த கார், கருப்புக்கவுனி , கர்நுால் சன்னம், கள்ளி முடையான், காட்டு யானம், காலாபாத், கிச்சலி சம்பா, குள்ளக் கார், குனுவக் கனையான், கொச்சின ் சம்பா, கொட்டார சம்பா, கொத்தமல்லி சம்பா, சித்த முச்சலு ரெட், சிவன் சம்பா, சிறுமிளகி, சீரக சம்பா, செங்கல்பட்டு சிறுமணி சம்பா, சொர்ண மசூரி உள்ளிட்ட நுாற்றுாக்கும் மேற்பட்ட விதை நெல் தாணியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
ஏற்பாடுகளை கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் ராஜா, உதவிப் பேராசிரியர் ரேகா, புதுச்சேரி அருங்காட்சியக மேலாளர் மனோரஞ்சினி, திருநாவுக்கரசு செய்திருந்தனர். நேற்று துவங்கிய கண்காட்சி இன்று வரை நடக்கிறது.