sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எறிபந்து போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது

எறிபந்து போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது

எறிபந்து போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது


ADDED : நவ 13, 2024 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 08:52 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்; குமாரப்பாளையத்தில் ஈஷா கிராமட்சவம் கிராமப்புற மகளிர் அணிகளுக்கான எறிபந்து போட்டிகள் வரும் 24ம் தேதி நடக்கிறது.

கோயம்புத்துார் ஈஷா யோகா மையம் சார்பில் ஆண்டுதோறும் கிராமப்புற மகளிர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் 'ஈஷா கிராமட்சவம்' பெயரில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்தாண்டிற்கான ஈஷா கிராமட்சவம் விளையாட்டு போட்டிகளில், 24 முதல் 45 வயதிற்குட்பட்ட கிராமப்புற மகளிர் அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான எறிப்பந்து போட்டி, திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் விநாயகர் கோவில் மைதானத்தில் வரும் 24ம் தேதி நடக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்க குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம், சுத்துக்கேணி, திருக்கனுார், சந்தை புதுக்குப்பம், கூடப்பாக்கம், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 12 மகளிர் அணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவு செய்துள்ள மகளிர் அணிகளுக்கு, புதுச்சேரி நகரப்பகுதிகளில் இருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, மாலை நேரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள கிராமப்புற மகளிர்கள் தங்களது அணிகளை சோமசுந்தரம் - 90874 39123 என்ற எண்ணில் வரும் 16ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us