தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு


ADDED : மார் 18, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விழுப்புரம் அடுத்த ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்லுாரியில் புதிதாக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடற்பயிற்சி கூடத்தை கல்லுாரியின் தலைவர் ராஜா திறந்து வைத்து பேசுகையில், 'மாணவர்கள் கல்வியுடன் உடல் ஆரோக்கியத்தையும் சமமாக மேம்படுத்தும் நோக்கில்,இத்தகைய வசதிகள் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்' என்றார்.

நிகழ்ச்சியில் கல்லுாரி செயலாளர் சிவராம் ஆல்வா. பொருளாளர் விமல், டிரஸ்டி சிந்து, கல்லுாரி முதல்வர் மகேந்திரன், டீன் கனிமொழி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us