நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 11 கிராம பஞ்சாயத்துகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி காலை 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திக்குறிப்பு:
நெட்டப்பாக்கம்- சிவன் கோவில் திடல், பண்டசோழநல்லுார்- கல்மண்டபம் சமுதாய நலக்கூடம், சூரமங்கலம் கலையரங்கம், ஏரிப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி, கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி திருமண நிலையம், மடுகரை கிழக்கு மரக்காளீஸ்வரர் கோவில் வளாகம், மடுகரை மேற்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், கரியமாணிக்கம் விவசாய பண்ணை வளாகம், ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி, கோர்க்காடு அரசு தொடக்கப் பள்ளி, செம்பியப்பாளையம் அய்யனார் கோவில் வளாகம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது. பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான அடிப்படை தேவைகளை எடுத்துக்கூறலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

