/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் தேநீர் விருந்து: முதல்வர் பங்கேற்பு
/
கவர்னர் தேநீர் விருந்து: முதல்வர் பங்கேற்பு
ADDED : ஜன 27, 2026 04:41 AM

புதுச்சேரி: குடியரசு தினத்தையொட்டி, மக்கள் மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கவர்னர் கைலாஷ்நாதன் வரவேற்று, குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். விருந்தில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், கல்யாணசுந்தரம், சிவசங்கர், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், தலைமை செயலாளர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான சிலம்பாட்ட கலைஞர் பழனிவேல், தேசிய அளவில் கலை கலாசார போட்டி மற்றும் கலா உத்சவ் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற புதுச்சேரி பள்ளி மாணவர்களை கவர்னர் கவுரவித்தார்.
முன்னதாக, கவர்னர் பங்கேற்ற பல்வேறு நிகழ்சிகளின் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் கடந்த 24ம் தேதி நடந்த தினமலர் பட்டம் இதழின் மெகா வினாடி வினா போட்டி நிகழ்ச்சியில், பிரதமர் அனுப்பிய கடிதத்தை கவர்னர் வாசித்தது மக்கள் மாளிகையில் இருந்த பிரம்மாண்ட ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டது.
காங்., - தி.மு.க., புறக்கணிப்பு கவர்னரின் தேநீர் விருந்தை, காங்கிரஸ், மற்றும் தி.மு.க.,வினர் புறக்கணித்தனர். அமைச்சர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

