/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீதி பரிபாலனத்தை மேம்படுத்தவே புதிய குற்றவியல் சட்டங்கள் ஆய்வு கூட்டத்தில் கவர்னர் தகவல்
/
நீதி பரிபாலனத்தை மேம்படுத்தவே புதிய குற்றவியல் சட்டங்கள் ஆய்வு கூட்டத்தில் கவர்னர் தகவல்
நீதி பரிபாலனத்தை மேம்படுத்தவே புதிய குற்றவியல் சட்டங்கள் ஆய்வு கூட்டத்தில் கவர்னர் தகவல்
நீதி பரிபாலனத்தை மேம்படுத்தவே புதிய குற்றவியல் சட்டங்கள் ஆய்வு கூட்டத்தில் கவர்னர் தகவல்
ADDED : மே 09, 2025 12:00 AM

புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை புதுச்சேரியில் நடைமுறை படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கவர்னர் தலைமையில் நடந்தது.
மத்திய அரசு, புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தி ஓராண்டு நிறைவடையும் நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வரும் 13ம் தேதி சீராய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடக நேற்று நடந்த இந்த கூட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித் குமார் சிங்ளா, சிறப்பு செயலர் கேசவன், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் கலந்து கொண்டனர். காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதி போலீஸ் அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சவால்கள், சிரமங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரியில், புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தி வருவது குறித்து கருத்துக்களை கேட்டறிந்த கவர்னர் பேசியதாவது;
சுமார் 200 ஆண்டுகால பழமையான நீதி பரிபாலன முறையை மேம்படுத்தும் வகையிலும், குடிமக்களுக்கான பாதுகாப்பு, விரைவாக நீதி கிடைப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையிலும் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. அவற்றை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் தனி மனித உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

