/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகேயில் நிகழ்ச்சிகள் கவர்னர் பங்கேற்பு
/
மாகேயில் நிகழ்ச்சிகள் கவர்னர் பங்கேற்பு
ADDED : நவ 15, 2025 05:48 AM
புதுச்சேரி: அரசு முறை பயணமாக மா கே சென்ற கவர்னர் கைலாஷ்நாதன் அங்கு அரசு சார்பில், சாலக்கரா, உஸ்மான் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று, முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
பின் சாலக்கராவில் ராஜிவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முழு நேர வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கான கட்டடம், பஞ்சகர்மா மற்றும் பிசியோ தெரபி சிகிச்சைக்கான கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லுாரி, போலீஸ் குடியிருப்புகளை துவக்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

