/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலின சமத்துவம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
பாலின சமத்துவம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 12, 2026 03:34 AM

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் பஞ்., மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கரியமாணிக்கத்தில் நடந்தது.
பேரணியில் 50க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு அடங்கிய பாததைகள் ஏந்தி மகளிர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி கரியமாணிக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கரியமாணிக்கம் பகுதிக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து மகளிர்கள் நாட்டுப்புற பாடல், நாடகம் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை உதயா, சேவக் நாராயணன், மலர்க்கொடி, சமூக அர்வலர் அம்பிகா, புத்தக கணக்காளர் பிரியதர்ஷினி, தலைவர் ஆனந்தி, உறுப்பினர்கள் தனலட்சுமி, ராஜலட்சுமி, சபரி, சசிகலா ஆகியோர் செய்திருந்தனர்.

