/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், அசனா த.வெ.க.,வில் இன்று இணைகின்றனர்

ADDED : நவ 27, 2025 04:36 AM
புதுச்சேரி: த.வெ.க.,வில் முன்னா ள் எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், அசனா இன்று அதிகாரபூர்வமாக இணைகின்றனர் .
புதுச்சேரி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அசனா ஆகியோர் அடையாரில் உள்ள த.வெ.க., கட்சி தலைவர் நடிகர் விஜயை அவரது இல்லத்தில் கடந்த 13ம் தேதி சந்தித்து பேசினர்.
புதுச்சேரியில் அரசியல் நிலவரங்களை கேட்டறிந்த விஜய், இருவரிடம் சட்டசபை தேர்தல் தொடர்பாக விவாதித்தார்.
த.வெ.க., தலைவர் விஜய் அடுத்த மாதம் 5ம் தேதி புதுச்சேரி வர உள்ள சூழ்நிலையில் இருவரும் இன்று 27ம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியில் இணைகின்றனர்.
அவர்களுடன் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் த.வெ.க.,வில் இணைகின்றனர்.