/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
/
முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : டிச 09, 2025 05:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரனின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்ப்டடது.
மடுகரை மந்தைவெளியில் நடந்த நிகழ்ச்சியில், ராம ச்சந்திரன் படத்திற்கு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் வட்டார காங்., தலைவர் அம்மைநாதன், ஊசுடு வட்டார காங்., தலைவர் சங்கர் பாபு, ராமச்சந்திரனின் பேரன் மோகன்ராம், என்.ஆர்., காங்., தொகுதி தலைவர் தனபூபதி, இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் சத்யநாராயணன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வேலாயுதம், தயாநிதி, அசோக், அரிகிருஷ்ணன் மற்றும் காங்., நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அன்னதானம் புதுச்சேரியில் அண்ணா சிலை அருகில் முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் படத்திற்கு, அவரது பேரன் மோகன்ராம், முன்னாள் தனி செயலர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடகிருஷ்ணன், அரசு நோட்டரி பப்ளிக் செல்வம், முன்னாள் தனி உதவியாளர் கிருஷ்ண ராஜேந்திரன், சன்னியாசிப்பம் ராஜ்குமார், முத்தியால்பேட்டை ஜெயராம், லிங்காரெட்டிபாளையம் பிரபாகரன், காட்டேரிக்குப்பம் ஜெயராஜ், நாராயணன், ஜெயக்குமார், ஜெயசங்கர், நரேந்திரன், பரசுராமன், சிவா, வீரபாகு, செல்வம், உதயமூர்த்தி, குமாரபாளையம் லோகையன், முருகானந்தம், சிங்காரவேலு, கதிரவன், விசாலாட்சி, அய்யப்பன், பாஸ்கர், ராஜவேலு பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

