sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணப்பட்டு வனப்பகுதியில் தீ விபத்து

மணப்பட்டு வனப்பகுதியில் தீ விபத்து

மணப்பட்டு வனப்பகுதியில் தீ விபத்து


ADDED : ஜூலை 13, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 05:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : மணப்பட்டு வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தில், புதுச்சேரி வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் முந்திரி, நெல்லி, நாவல், பனை, சவுக்கு உள்ளிட்ட 2 லட்சத் திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையிலான மரங்கள் உள்ளன.

மேலும், நரி, கீரிப்பிள்ளை, பாம்பு, உடும்பு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணியளவில், வனத்தில் சவுக்கு மரங்கள் உள்ள பகுதியில் கீழே கிடந்த சரகுகள் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. அங்கிருந்து புகை வெளியேறியதை கண்டு, அருகில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us