/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 14ம் தேதி வெளியீடு
/
இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 14ம் தேதி வெளியீடு
இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 14ம் தேதி வெளியீடு
இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 14ம் தேதி வெளியீடு
ADDED : ஜன 20, 2026 04:11 AM

புதுச்சேரி: இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்.14ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
தீவிர வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் கேசவன் தலைமையில், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், பங்கேற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
மேலும் சிறப்பான முறையில் தீவிர வாக்காளர் பட்டியல் பணி நடைபெற்றது குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வரும் பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார்.

