sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு


ADDED : ஆக 05, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 01:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுக்குள் கல்லுாரி, பாடப்பிரிவுகளை முன்னுரிமை கொடுக்க சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத பி.டெக்., இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இவர்களுக்கான சென்டாக் லேட்ரல் என்ட்ரி சேர்க்கை விண்ணப்ப படிவங்கள், ஜூன் மாதம் 11 ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி ஆன்-லைனில் (www.centacpuducherry.in) வினியோகிக்கப்பட்டது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர்.

அதை தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்த சென்டாக் கடந்த மாதம் 18 ம் தேதி வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இதில் பெறப்பட்ட ஆட்சேபனை பரிசீலனை செய்யப்பட்டு தற்போது இறுதி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக், மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு வழியாக இன்று 5ம் தேதி மதியம் 1 மணிக்குள் கல்லுாரி, பாடப்பிரிவுகளை முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.

எவ்வளவு சீட் பி.டெக்., லேட்ரல் படிப்புகளை பொருத்தவரை மொத்தம் 343 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளது. இவை பொது-169, ஓ.பி.சி.,-40, எம்.பி.சி.,-61, மீனவர்-8, முஸ்லீம்-7, எஸ்.சி.,-54, எஸ்.டி.,-3 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us