/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.எஸ்.ஐ., வில்லியனுார் கிளைக்கு சிறந்த செயல் திறனுக்கான பரிசு
/
இ.எஸ்.ஐ., வில்லியனுார் கிளைக்கு சிறந்த செயல் திறனுக்கான பரிசு
இ.எஸ்.ஐ., வில்லியனுார் கிளைக்கு சிறந்த செயல் திறனுக்கான பரிசு
இ.எஸ்.ஐ., வில்லியனுார் கிளைக்கு சிறந்த செயல் திறனுக்கான பரிசு
ADDED : பிப் 26, 2024 05:02 AM

புதுச்சேரி: அகில இந்திய அளவில் தொழிலாளர் காப்பீட்டு கழக வில்லியனுார் கிளைக்கு, சிறந்த செயல்திறன் பிரிவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
தொழிலாளர் காப்பீட்டு கழக நிறுவனத்தின் 73வது ஆண்டு நிறுவன நாள் விழா, டில்லியில் நடந்தது.தொழிலாளர் துறை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை தாங்கி, நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர் காப்பீட்டு கழக அலுவலகங்களில் பெரிய, நடுத்தர, சிறிய பிரிவுகளின் கீழ் அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப பரிசு வழங்கி, பாராட்டினார்.
அதன்படி, சிறிய பிரிவின் கீழ் தொழிலாளர் காப்பீட்டு கழக புதுச்சேரி மண்டலம், வில்லியனுார் கிளை, சிறந்த செயல் திறனுக்கான முதல் இடம் பிடித்தது. இதற்கான கேடயம் மற்றும் சான்றிதழை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், தொழிலாளர் காப்பீட்டு கழக வில்லியனுார் கிளை மேலாளர் லுார்துசாமியிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் காப்பீட்டு கழக தலைமை இயக்குநர் ராஜேந்திரகுமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.