/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இ.எஸ்.ஐ ., குறைதீர்ப்பு முகாம்
/
புதுச்சேரியில் இ.எஸ்.ஐ ., குறைதீர்ப்பு முகாம்
ADDED : பிப் 05, 2024 05:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக காந்தி நகர் கிளை அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்ப்பு முகாமில் பயனாளிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளை மேலாளர் சையது இம்தியாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் காந்தி நகர் கிளை அலுவலகத்தில் வரும், 7 மற்றும் 16ம் தேதி, மதியம் 3:00 முதல் 4:00 மணி வரை, குறை தீர்ப்பு முகாம், நடைபெற உள்ளது.
தட்டாஞ்சாவடி, குரும்பப்பேட்டை, மேட்டுப்பாளையம், சேதாரப்பேட்டை, ரெட்டியார் பாளையம், கோரிமேடு, முத்திரை பாளையம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் உள்ள தொழிலாளர்கள், பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர்கள், தங்களுக்கு இ.எஸ்.ஐ ., சம்மந்தம் உள்ள கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை விரிவாக ஓர் கடிதத்தில், குறிப்பிட்டு தக்க ஆவணங்களுடன் முகாமில் சமர்ப்பிக்கலாம்.
அந்த கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

