/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 23, 2025 01:24 AM

பாகூர் : ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான தன் சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் நான்சி ஏஞ்சலின் வரவேற்று, நோக்கவுரையாற்றினார். மகாத்மா காந்தி மருத்துவமனையில் இருந்து ஸ்கூல் ஆப் பிசியோதெரபி பிரிவில் இயன்முறை மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்கள், துறைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு தன் சுத்தம் மற்றும் சுற்றுச்சூழலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், தன் சுத்தத் தில் கைகள் மற்றும் பற்கள், உடலை சுத்தமாக பேணுதல் குறித்தும், சுற்றுச்சூழலை துாய்மையாக பாதுகாத்தல் குறித்து விரிவாக படத்துடன் விளக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழாசிரியர் ரகுநாதன் நன்றி கூறினார்.

