sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்துயாஸ்டிக், எல்.எம்., அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி

 என்துயாஸ்டிக், எல்.எம்., அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி

 என்துயாஸ்டிக், எல்.எம்., அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி


ADDED : ஏப் 20, 2026 06:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 06:28 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் சங்கம் சார்பில் 16வது டி 20 கிரிக்கெட் லீக் கம் - நாக் அவுட் போட்டிகள் கோரிமேடு டோல்கேட் அருகே உள்ள மொரட்டாண்டி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பிப்., 7ம் தேதி துவங்கியது.

இப்போட்டியில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசாக 10 ஆயிரம், 3ம் பரிசாக 7 ஆயிரம், 4ம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

இதில், நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் லாஸ்பேட்டை என்துயாஸ்டிக் அணி - திலாஸ்பேட்டை என்.ஆர். கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய என்துயாஸ்டிக் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அருண் சார்லஸ் 80 ரன்கள் எடுத்தார். குமார் 3 விக்கெட், மணி 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின் ஆடிய என்.ஆர்.கிங்ஸ் அணி 10 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் சுரேஷ் 36 ரன்கள் எடுத்தார். சிரஞ்சீவி 3 விக்கெட், சுரேந்தர், கோகுல்நாத் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். என்துயாஸ்டிக் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அருண் சார்லஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

2வது அரை இறுதிப் போட்டியில் அரியாங்குப்பம் டைட்டன்ஸ் அணி - அரியாங்குப்பம் எல்.எம்., அணிகள் மோதின. முதலில் ஆடிய எல்.எம்., அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அணியின் மோகன் 53 ரன்கள் எடுத்தார். சந்தோஷ் 3 விக்கெட், சச்சின், குரு தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய டைட்டன்ஸ் அணி 14 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் மதன் 33 ரன்கள் எடுத்தார். வினோத் 4 விக்கெட், செந்தில் 3 விக்கெட் வீழ்த்தினர்.

அரியாங்குப்பம் எல்.எம்., அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. வினோத் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us