ADDED : பிப் 12, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் தர்மபுரி வீதியைச் சேர்ந்தவர் சிவா, 38; தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கு திடீரென உடல் நிலை பாதித்து, கடந்த 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. கடந்த 9ம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

