sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு... மாற்றம் : வேட்பாளர் பட்டியல், சின்னம் பொருத்தும் பணி

 மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு... மாற்றம் : வேட்பாளர் பட்டியல், சின்னம் பொருத்தும் பணி

 மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு... மாற்றம் : வேட்பாளர் பட்டியல், சின்னம் பொருத்தும் பணி


ADDED : மார் 31, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 10:56 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் இன்று லாஸ்பேட்டை பகுதியில் உள்ள 3 ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட உள்ளன. நாளை வேட்பாளர் பெயர், சின்னத்துடன் பொருத்தி, நிரந்தர பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுதும் 30 தொகுதிகளில் மொத்தம் 1099 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநில கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 வேட்பாளர்கள் மொத்தம் 294 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்த வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட சூழ்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படுவதற்காக அச்சடிக்கப்பட்டன. இவையும் முடிந்துவிட்டன. அதையடுத்து, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல், சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் துறை துவங்க உள்ளது.

இதற்காக மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், தாகூர் கலை கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக், மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மூன்று ஓட்டு எண்ணும் மையங்களில் தற்காலிக பாதுகாப்பு கிடங்கிற்கு இன்று காலை 11:30 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட உள்ளன.

தொடர்ந்து, நாளை 2ம் தேதி மின்னணு ஓட்டப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட உள்ளன. வேட்பாளர் பட்டியல், சின்னம் பொருத்தப்பட உள்ளது. தொடர்ந்து அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் முறையாக சீல் வைத்து, நிரந்தர பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளன. 8ம் தேதி இந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளன.

புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை 30 சட்டசபை தொகுதிகளில் 1099 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 1099 கட்டுப்பாட்டு கருவி, 1099 வி.வி.,பாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. புதுச்சேரி மாவட்டத்தினை பொருத்தவரை 918 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 918 கட்டுப்பாட்டு கருவிகள், 918 வி.வி.,பாட் பயன்படுத்தப்படுகிறது.

இது மட்டுமின்றி அவசர சூழ்நிலையை சமாளிக்க 364 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 364 கட்டுப்பாட்டு கருவி, 459 வி.வி., பாட் இருப்பு தயாராக வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தினை பொருத்தவரை தலா 181 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி., பாட் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிட தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us