sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் செலவினங்கள் பராமரிப்பு  பயிற்சி

 தேர்தல் செலவினங்கள் பராமரிப்பு  பயிற்சி

 தேர்தல் செலவினங்கள் பராமரிப்பு  பயிற்சி


ADDED : மார் 24, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 10:52 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் செலவினங்களைச் சரியாகப் பராமரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

புதுச்சேரியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கவும், நியாயமான முறையில் தேர்தலை நடத்தவும் 38 மத்தியப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. புதுச்சேரியின் 30 சட்டசபை தொகுதிகளுக்கு, பொதுப் பார்வையாளர்களாக 17 பேர், ​செலவினக் கண்காணிப்பாளர்கள் 17 பேர், ​காவல் பார்வையாளர்கள் 4 பேர், என, மொத்தம் 38 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பிற்குள் செலவுகளைக் கொண்டு வருவது மற்றும் ஒவ்வொரு செலவிற்கும் முறையான ரசீதுகளைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லித்தோப்பு மற்றும் முதலியார்பேட்டை தேர்தல் செலவின கண்காணிப்பாளர் கிஷோர் தலைமையில் கல்வித்துறை வளாகத்தில் நேற்று நடந்த பயிற்சி வகுப்பில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கணக்குகளை நிர்வகிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், தினசரி செலவுகளை எந்தெந்தப் படிவங்களில் பதிய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. கணக்குகளில் குளறுபடி ஏற்பட்டாலோ அல்லது உரிய நேரத்தில் தாக்கல் செய்யத் தவறினாலோ ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us