தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்கள்; தானியங்கி முறையில் பகிர ஏற்பாடு 

தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்கள்; தானியங்கி முறையில் பகிர ஏற்பாடு 

தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்கள்; தானியங்கி முறையில் பகிர ஏற்பாடு 


ADDED : ஜூன் 06, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; தேர்தல் ஆணையத்தின் குறியீட்டு அட்டைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தானியங்கி முறையில் விரைவாக பகிரும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், நடந்த கூட்டத்தில், தேர்தலுக்குப் பிந்தைய முக்கிய புள்ளி விவரங்களை விரைவாகவும் துல்லியமாகவும் பகிரும் நோக்கில், குறியீட்டு அட்டைகள்மற்றும் புள்ளி விவர அறிக்கைகள்தயாரிப்பதை முற்றிலும் தானியக்கமாக மாற்றியுள்ளது.

முன்னதாக, இந்த தகவல்கள் கையேடுகளில் கைமுறையால் பதிவேற்றப்பட்டு, பின், இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டு வந்தது. இது, நேரம் விரயமானதாகவும் பல அடுக்குகள் கொண்ட செயல்முறையாகவும் இருந்தது. இப்போது, தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய முறை மூலம், தகவல்களின் ஒருங்கிணைப்பு, தானியக்கம் ஆகியவை மெருகேற்றப்பட்டுள்ளது. இந்த குறியீட்டு அட்டை என்பது சட்ட ரீதியாக கட்டாயமில்லாத, தேர்தலுக்குப் பிந்தைய புள்ளி விவர அறிக்கை வடிவமாகும். இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சொந்த முன்முயற்சியாக உருவாக்கப்பட்டது.

தேர்தல் தொடர்புடைய தரவுகளைத் தொகுதி அளவில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கையியலாளர்கள், பத்திரிகையாளர், பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றும் நோக்குடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் விபரம், வாக்காளர்களின் எண்ணிக்கை, பதிவான ஓட்டுகள், எண்ணப்பட்ட ஓட்டுகள், கட்சி மற்றும் வேட்பாளர் அடிப்படையிலான ஓட்டு விகிதங்கள், பாலின அடிப்படையிலான ஓட்டுப்பதிவு, பிராந்திய வேறுபாடுகள், மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்திறன் ஆகிய பல பரிமாணங்களில் தரவைப் பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் மாநிலம் மற்றும் தொகுதி வாரியான விவரங்கள், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, பெண்கள் பங்கேற்பு, தேசிய, மாநிலக் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் செயல்திறன், வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பற்றிய பகுப்பாய்வுகள் ஆகியவை இடம்பெறும். தொகுதி வாரியான விரிவான முடிவுகள், மற்றும் சுருக்கமான தரவுப் பட்டியல்கள் போன்ற அம்சங்கள் அடங்கியதாக இருக்கும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us